பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா

பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார்.

Update: 2021-09-18 12:04 GMT
அமிர்தசரஸ்,

பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். தனது  பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அமரீந்தர் சிங் வழங்கினார். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுவதாக இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே அமரீந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். 

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டதில் இருந்தே அமரிந்தர் சிங்கிற்கு எதிராக எம்.எல்.ஏக்கள் சிலர் தொடர்ந்து போர்க்கொடி தூக்கினர். அதேபோல், அமரிந்தர் சிங் ஆதரவாளர்களும் சித்து நியமனத்திற்கு எதிர்ப்புக்குரல் கொடுத்து வந்தனர். இவ்வாறாக இருவருக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்த நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி பதவியில் இருந்து அமரிந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். 

மேலும் செய்திகள்