கொரோனா பாதிப்பு; பெங்களூருவில் அக்டோபர் 11 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு

கர்நாடகாவின் பெங்களூருவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு வருகிற அக்டோபர் 11 வரை இரவுநேர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-09-27 11:47 GMT

பெங்களூரு,

நாட்டின் கொரோனா 2வது அலையில் முதல் அலையை விட பெருமளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன.  இதனை தொடர்ந்து, ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது.  இந்த நிலையில், கொரோனா பாதிப்புகளின் தீவிரம் பரவலாக குறைந்து காணப்படுகிறது.  இதனால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

எனினும், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.  இதனை நகர காவல் ஆணையாளர் அறிவித்து உள்ளார்.  பெங்களூருவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு வருகிற அக்டோபர் 11ந்தேதி வரை இரவுநேர ஊரடங்கு (காலை 10 மணி முதல் காலை 5 மணி வரை) நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்