ஜம்மு காஷ்மீர்; ஊடுருவல் முயற்சி முறியடிப்பு, பயங்கரவாதி கைது

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒருவாரத்தில் ஏழு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-28 10:25 GMT
ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீரின் உரி செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல்  முயற்சியுடன் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 18 ஆம் தேதி முதல்  பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இந்த நிலையில், எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில்  ஊடுருவல் முயற்சியில்  ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். 

மேலும் ஒரு பயங்கரவாதி உயிருடன் பிடிபட்டான். பிடிபட்ட பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பதும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையன் என்பதும் தெரிய வந்து இருப்பதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பயங்கரவாதிகளுடனான என்கவுண்டரின் போது ராணுவ வீரர்கள் சிலரும் காயம் அடைந்தனர். ராணுவத்திடம் சிக்கிய பயங்கரவாதி பாகிஸ்தானை சேர்ந்த பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவன் என்பதும்  அவனது பெயர் அலி பாபர் பர்ரா ( வயது 19) என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்