கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலம்; புர்ஜ் காலிபா வடிவமைப்பில் அலங்காரம்

கொல்கத்தாவில் தசரா பண்டிகையை ஒட்டி புர்ஜ் காலிபா போன்ற வடிவமைப்பில் பந்தல் அலங்காரம் அமைக்கப்பட்டது.

Update: 2021-10-12 19:25 GMT
கொல்கத்தா,

கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக,  தசரா பண்டிகையை ஒட்டி ஸ்ரீ பூமி பூஜா பந்தல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

துபாயில் உள்ள மிக  உயரமான கட்டிடமான புர்ஜ் காலிபா போன்ற வடிவமைப்பில் இந்த பந்தல் அலங்காரம் அமைக்கப்பட்டது.இதனை காண ஏராளமான பொதுமக்கள் கூடினர்.

இந்த உயரமான பந்தல் அமைப்பு  விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. ஆனால், அவ்வாறு புகார் ஏதும் வரவில்லை என்று மாநில அமைச்சரும்,  ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப்பின் தலைவருமான சுஜித் போஸ் மறுப்பு தெரிவித்தார். மக்கள் அதிக அளவில் கூடியுள்ளதால் பந்தலில் விளக்குகளின் அளவு குறைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் இந்த அலங்காரத்தை காண மக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்