கேரளாவில் 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது - கேரள சுகாதாரத்துறை மந்திரி

கேரளாவில் இதுவரை 2.5 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-10-13 07:31 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனாவைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் மும்முமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.

கேரள மக்கள் தொகையில் 93.64 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 44.50 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கேரளாவில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும், மக்களிடையே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் குறைவாக காணப்படுவதாகவும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை குறிப்பிட்ட இடைவெளிக்குள் செலுத்தி கொண்டால் மட்டுமே முழு பயன் என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தி உள்ளார்.

கேரளாவில்  சில தினங்களாக தொடர்ந்து கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்