தலீபான்களுடன் பேச்சுவார்த்தை: ரஷியா அழைப்பை ஏற்ற இந்தியா

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலீபான்களும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-10-15 06:35 GMT
image courtesy: PAVEL GOLOVKIN/POOL/AFP VIA GETTY IMAGES
புதுடெல்லி

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து  கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.

இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

அங்கு புதிய ஆட்சி  அமைத்துள்ள தலீபான்கள் பல்வேறு சட்டதிட்டங்களை விதித்து உள்ளனர்.  

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதல் முறையாக தலீபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளும், அமெரிக்க அரசின் மூத்த அதிகாரிகளும் கடந்த 9-ந்தேதி கத்தார் தலைநகர் தோகாவில் சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக   இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த நிலையில் அக்டோபர் 20 அன்று ரஷியாவின் மாஸ்கோவில் ஆப்கானிஸ்தான் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ரஷியா  இந்தியாவுக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இந்த அழைப்பை இந்தியா  ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த வாரம், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் ஆப்கானிஸ்தான் சிறப்பு பிரதிநிதி ஜமீர் கபுலோவ், அக்டோபர் 20 அன்று ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்வதேச பேச்சுவார்த்தைக்கு  தலீபானின் பிரதிநிதிகளை அழைத்து உள்ளதாக கூறி உள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிகாரத்தைக் கைப்பற்றிய தலீபான்களும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவுடன் நேருக்கு நேர் அவர்களை பேசும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

இந்திய பங்கேற்பதை , வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி  உறுதி செய்து உள்ளார். அக்டோபர் 20 அன்று ஆப்கானிஸ்தானில் ரஷியா வடிவமைப்புக் கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. நாங்கள் அதில் பங்கேற்போம் என கூறினார். 

கூட்டத்திற்கு வெளியுறவுத்துறையைச்சேர்ந்த ஒரு இணை செயலாளர்-நிலை அதிகாரியை  அனுப்ப வாய்ப்புள்ளது- இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்