பூஜையில் பணம் இரட்டிப்பாகும்; மோசடி தம்பதியிடம் ரூ. 29 லட்சத்தை இழந்தவர்

வீட்டை விற்று 29 லட்சம் ரூபாயை எடுத்து வந்த முகமது ஷாரூக்கிடம் அதை 40 லட்சமாக மாற்றி தருவதாக கூறிய மோசடி தம்பதியின் வார்த்தையை நம்பி ஒரு அறையில் வைத்து விட்டு சென்றுள்ளார்.

Update: 2021-10-21 10:11 GMT
ஐதராபாத்

தெலங்கானாவில் பூஜை  மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிலாபாத் மாவட்டம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சுக்ரீவ்- சங்கீதா தம்பதி, அப்பகுதியில் பணம் வைத்திருப்பவர்களை குறிவைத்து, அவர்களிடம் நட்பாக பழகி, தாங்கள் செய்யும் ஒரு சிறப்பு பூஜை மூலம் பணத்தை இரட்டிப்பு ஆக்கி தருவதாக கூறியுள்ளனர். அதை நம்பிய முகமது ஷாரூக் என்பவர் கடந்த ஜூன் மாதம் 50 ஆயிரத்தை தம்பதி ஏற்பாடு செய்திருந்த ஹோமத்தில் வைத்து, பிறகு 80 ஆயிரத்தை எடுத்துச் சென்றதாகவும், 2வது முறை 1 லட்சம் ரூபாய் வைத்த முகமது ஷாரூக், ஒன்றரை லட்சத்தை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து  தனது வீட்டை விற்று 29 லட்சம் ரூபாயை எடுத்து வந்த முகமது ஷாரூக்கிடம் அதை 40 லட்சமாக மாற்றி தருவதாக கூறிய மோசடி தம்பதியின் வார்த்தையை நம்பி ஒரு அறையில் வைத்து விட்டு சென்றுள்ளார். இரண்டு நாள் கழித்து வந்து பார்த்தபோது இருவரும் அந்த இடத்தில் காணவில்லை. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார், மோசடி தம்பதியை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்