மத்திய உள்துறை மந்திரிக்கு கவர்னர் பிறந்த நாள் வாழ்த்து

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு புதுச்சேரி கவர்னர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Update: 2021-10-23 00:06 GMT


புதுச்சேரி,


மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்க உறுதி கொண்டு, பிரதமரோடு தோளோடு தோள் நின்று தீராத காஷ்மீர் எல்லை பிரச்னை முதல் கன்னியாகுமரி வரை அகண்ட பாரதத்தை அரசியல் சாணக்கியத்துடன் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லும் எங்களின் வழிகாட்டியான மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.  பூரண உடல் ஆரோக்கியத்தோடு, நீண்ட ஆயுள் பெற்று மக்கள் பணியாற்ற பிரார்த்திக்கிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்