அவதூறு வழக்கில் ஆஜராக ராகுல்காந்திக்கு குஜராத் கோர்ட்டு உத்தரவு

வருகிற 29-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு ராகுல்காந்திக்கு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Update: 2021-10-26 16:47 GMT
கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி, கர்நாடக மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல்காந்தி பங்கேற்றார். அங்கு பேசுகையில், ‘‘நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களும் எப்படி மோடி என்ற ஒரே துணைப்பெயரை வைத்துள்ளனர்?’’ என்று கேட்டார்.

இதன்மூலம், மோடி என்ற சமூகத்தினரை ராகுல்காந்தி இழிவுபடுத்திவிட்டதாக குஜராத் பா.ஜனதா எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி (இப்போது மந்திரியாக உள்ளார்) சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலும், இந்த ஆண்டு ஜூன் 24-ந் தேதியும் அக்கோர்ட்டில் ராகுல்காந்தி ஆஜரானார்.

2 புதிய சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், புதிதாக வாக்குமூலம் அளிப்பதற்காக, வருகிற 29-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு ராகுல்காந்திக்கு தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்  உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்