மராட்டியத்தில் வாகனங்கள் மோதல்; 3 பேர் உயிரிழப்பு
மராட்டியத்தில் 7 முதல் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கொண்டதில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.
துலே,
மராட்டியத்தின் துலே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த 7 முதல் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.