இந்தியர்களும், இஸ்ரேலியர்களும் இணைந்து செயல்படும்போது ஆச்சரியமான விஷயங்கள் நடைபெறும் - இஸ்ரேல் பிரதமர்

இந்தியர்களும், இஸ்ரேலியர்களும் இணைந்து செயல்படும்போது ஆசரியமான விஷயங்கள் நடைபெறும் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-17 11:47 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கர்நாடகாவில் தொழில்நுட்ப மற்றும் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பல்வேறு பெரு நிறுவனங்களில் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. 

இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான ‘பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாடு’ இன்று தொடங்கியது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இந்த உச்சிமாநாட்டை துவங்கி வைத்தார்.

இந்நிலையில், இந்த பெங்களூரு தொழில்நுட்ப உச்சிமாநாட்டு குறித்து இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஆச்சரியமான மக்கள் ஆச்சரியமான விஷயங்களை செய்வார்கள் என நான் எப்போதும் கூறுவேன். பரந்து விரிந்த டிஜிட்டல் நிபுணத்துவத்துடனும், உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளில் ஒன்று. இந்தியா உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. 

அதேவேளை, புதிய தொழில்நுட்ப கண்டுபிடிக்கும் நாடுகளில் இஸ்ரேல் முன்னிலையில் உள்ளது. இந்தியர்களும், இஸ்ரேலியர்களும் இணைந்து செயல்படும்போது ஆச்சரியமான விஷயங்கள் நடைபெறும்' என்றார்.

மேலும் செய்திகள்