6.5 கோடி கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி; பிரதமர் மோடி

நடப்பு ஆண்டில் 6.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஏற்றுமதி செய்துள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2021-11-18 15:27 GMT


புதுடெல்லி,

பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே மருந்து பிரிவில் முதல் சர்வதேச கண்டுபிடிப்புக்கான மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.  அவர் கூறும்போது, ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

உலக அளவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணங்களை ஒட்டுமொத்த உலகிற்கும் நாம் காட்டியுள்ளோம்.  உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு நாம் ஏற்றுமதி செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோன்று, நடப்பு ஆண்டில் 100 நாடுகள் வரை, 6.5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை ஏற்றுமதி செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்