அசாமில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.1 ஆக பதிவு

அசாமில் இன்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-11-20 08:55 GMT


கவுகாத்தி,


அசாமின் கவுகாத்தி நகரில் இன்று மதியம் 1 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.1 ஆக பதிவாகி உள்ளது.  இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.


மேலும் செய்திகள்