உத்தரகாண்ட்: பிளாஸ்டிக், குப்பைகளை எரிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

உத்தரகாண்டின் டேராடூனில் பிளாஸ்டிக், குப்பைகளை பொதுவெளியில் எரிப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

Update: 2021-11-21 11:13 GMT
டேராடூன்,

டெல்லியில் கொரோனா பரவல் குறைந்த பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளுக்கு பின் காற்று மாசு மெல்ல அதிகரிக்க தொடங்கியது.  இதுபற்றிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

டெல்லியில் ஊரடங்கை அமல்படுத்த தயார் என்று சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு கூறியதுடன். டெல்லியின் என்.சி.ஆர். பகுதிகளை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஊரடங்கை அமல்படுத்தினால் அர்த்தமுள்ள ஒன்றாக இருக்கும் என ஆலோசனையும் வழங்கியது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.  இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில், காற்றின் தரம் மேம்படுவதற்கான செயல் திட்டம் பற்றி ஆய்வு கூட்டம் ஒன்று டேராடூன் மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜேஷ் குமார் தலைமையில் இன்று நடந்தது.

இதன் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ், டேராடூன் மற்றும் ரிஷிகேஷ் நகரில் தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் கீழ் காற்றின் தரம் மேம்படுவதற்கான செயல் திட்டம் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை பொதுவெளியில் எரிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.  அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்