கர்நாடகாவில் வெள்ள பாதிப்பு; திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்ட முதல்-மந்திரி

கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

Update: 2021-11-23 09:54 GMT


பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தொடர் கனமழையால் எலகங்கா ஏரியில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால், கேந்திரிய விகார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழையால் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்த நிலையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.  அவர் கேந்திரிய விகார் குடியிருப்பு பகுதிகளில் மழைநீரின் வழியே திறந்த வாகனத்தில் நின்றபடி சென்று மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதேபோன்று, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முழுவதும் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முன்பு அறிவிப்பு வெளியிட்டார்.  அவை 3 தவணைகளில் வழங்கப்பட உள்ளது.

உடனடியாக முதல் தவணையாக ரூ.1 லட்சம் விடுவிக்கும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவும் வெளியிட்டார்.  சேதமடைந்த சாலைகள், பாலங்களை சீரமைக்க மாநில அரசு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.  கடந்த ஞாயிறு அன்று, அடுத்த 5 நாட்களுக்கு கர்நாடகாவில் பரவலாக லேசானது முதல் மிதஅளவிலான மழை பெய்ய கூடும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்