கேரளாவில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.160 ஆக உயர்வு

கேரளாவில் தக்காளி சில்லரை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.160 வரை உயர்ந்து உள்ளது.

Update: 2021-12-07 15:25 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் தொடர் கனமழையை அடுத்து, தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.  தொடர்மழையால் பயிர்கள் சேதமடைந்து உள்ளன.  இதனால், மொத்த மற்றும் சில்லரை விலையில் இதன் பாதிப்பு எதிரொலித்து உள்ளது.

இதன்படி, தக்காளியின் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.120 ஆக உயர்ந்து உள்ளது.  இதேபோன்று, தக்காளி சில்லரை விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.140 முதல் ரூ.160 வரை உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்