மத்திய அரசை ஆர்.எஸ்.எஸ் கட்டுப்படுத்தவில்லை: மோகன் பகவத் சொல்கிறார்

இந்திய மக்களின் மரபணு 40,000 ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது. நாம் அனைவருக்கும் ஒரே மூதாதையர் தான் என மோகன் பகவத் கூறியுள்ளார்.

Update: 2021-12-19 08:02 GMT
தர்ம்சலா, 

இமாசல பிரதேசம் தர்மசாலாவில் முன்னாள் ராணுவத்தினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது;-

பாஜக தலைமையிலன மத்திய அரசை  ஒருபோதும் ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்தவில்லை. பாஜகவின் கொள்கைகள் வேறு. பாஜகவினரின் செயல்பாட்டு முறை வேறு. அதை செயல்படுத்துபவர்களும் வேறு. பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சிலர் ஆர்எஸ்எஸ்ஸில் இருக்கிறார்கள். அது மட்டும்தான் ஆர்எஸ்எஸ் - பாஜக இடையேயான தொடர்பு. மற்றபடி ஊடகங்கள் சொல்வதுபோல் நாங்கள் பாஜகவை இயக்கும் நேரடி ரிமோட் கன்ட்ரோல் எல்லாம் இல்லை.

மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராகவுள்ளது. எங்களுக்கு எப்போதும் எதிரிகள் உள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பு 96 வருடங்களாக பல தடைகளை தாண்டி செயல்பட்டு வருகிறது. சமூகத்திற்கு ஒரு தேவை என வரும்போது நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்க மாட்டோம். 

உடனடியாக களத்தில் இறங்கி பணியாற்றுவோம். நாங்கள் பாராளுமன்றத்தை மட்டும் நடத்தவில்லை, மக்களுடன் இணைந்து தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்படுகிறோம் என்பதை உணர்த்தியிருக்கிறோம். 

எந்த விளம்பரமும், பொருளாதார தேவையும், அரசாங்கத்தின் துணையும் இன்றி பணி செய்து வருகிறோம். இந்திய மக்களின் மரபணு 40,000 ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது. நாம் அனைவருக்கும் ஒரே மூதாதையர் தான். அவர்களால் தான் நமது நாடு செழிப்புடனும், கலாச்சாரத்துடனும் இன்றும் பிரகாசிக்கிறது” என்றார். 

மேலும் செய்திகள்