இமாச்சல பிரதேசத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

இமாச்சல பிரதேசத்தில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2022-01-04 00:29 GMT
கோப்புப்படம்

சிம்லா,

இமாச்சல பிரதேசதில் பழங்குடியினர் வசிக்கும்  கின்னவுர் மாவட்டத்தில் நேற்று 2.8 ரிக்டர் அளவில் லேசான  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில், சேதம் எதுவும் ஏற்படவில்லை.

நிலநடுக்கத்தின் மையம் கின்னவுர் மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 5 கிமீ ஆழத்தில் இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 45 வினாடிகள் நீடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்