யானைகளின் மின்வேலி மரணங்களை தடுக்க பொதுநல மனு மத்திய - மாநில அரசுகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு நோட்டீஸ்

இந்த பொதுநல மனு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Update: 2022-01-05 22:11 GMT
புதுடெல்லி,

அரியானா மாநிலம் குருகிராம் நகரத்தை சேர்ந்த பத்திரிகையாளரான பிரேர்னா சிங் பிந்த்ரா, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

மின்வேலியில் சிக்கி யானைகள் இறக்கின்றன. இதை தடுக்க 2010-ம் ஆண்டு பணிக்குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், யானைகள் வழித்தடங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள மின் வேலிகளில் மின் காப்பீடு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த பொதுநல மனு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்