கேரளா: 15-18 வயது உடையவர்களுக்கு ஒரு வாரத்தில் தடுப்பூசி போட முடிவு

கேரளாவில் இந்த வாரத்திற்குள் 15-18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என முதல்-மந்திரி உத்தரவிட்டு உள்ளார்.

Update: 2022-01-10 09:02 GMT

திருவனந்தபுரம்,


கொரோனாவின் 2வது அலை பிற மாநிலங்களில் குறைந்த போதிலும் கேரளாவில் பாதிப்புகள், தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருந்து வருகின்றன.  இதனை தொடர்ந்து தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்நிலையில், ஒமைக்ரான் பாதிப்புகளும் பரவி வருகின்றன.  இதனை தொடர்ந்து ஊரடங்கை கடுமையாக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.  அதேபோன்று, 15-18 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடவும் அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதன் ஒரு பகுதியாக கேரளாவிலும் இந்த பணி நடந்து வருகிறது.  கொரோனா பரவல் சூழலை முன்னிட்டு, கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆய்வு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

இதன்பின், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.  இதன்படி, திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கையை 50 ஆக நிர்ணயிப்பது என முடிவு செய்யப்பட்டது.

15-18 வயதுடையவர்களுக்கு இந்த வாரத்திற்குள் தடுப்பூசி போட்டு முடிக்கும் பணியை கேரள சுகாதார மற்றும் கல்வி துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்