திடீரென இடிந்து விழுந்த தரைப்பாலம்: சிக்கிக்கொண்ட சரக்கு வாகனம்

கர்நாடகாவில் தரைப்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில் சரக்கு வாகனம் சிக்கிக்கொண்டது.

Update: 2022-01-19 11:29 GMT
பெல்லாரி,

கர்நாடகாவில்  பெல்லாரி மாவட்டத்தில் உள்ள பொம்மன்ஹள்ளி கிராமத்தில் கால்வாயை கடந்து செல்ல கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. அந்த பாலம் சிதிலமடைந்திருந்த நிலையில், நேற்று மாலை பாலத்தின் மீது காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சென்றுள்ளது 

இதனையடுத்து சரக்கு வாகனத்தின் பாரம் தாங்காமல் தரைப்பாலம் இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் மேல் சென்றுக் கொண்டிருந்த சரக்கு வாகனம் கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

பின்னர் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் கிரேன் உதவியுடன் சரக்கு வாகனம் மீட்கப்பட்டது. லேசான காயங்களுடன் சரக்கு வாகன ஓட்டுநர்  உயிர் தப்பினார். 

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலம் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து இருந்ததாக மக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் செய்திகள்