கர்நாடகத்தில் 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் - மாநில அரசு உத்தரவு

கர்நாடகத்தில் 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-01-25 20:16 GMT
பெங்களூரு,

கர்நாடக அரசு 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொதுப்பணித் துறை கூடுதல் செயலாளராக பி.எச்.அனில்குமார், யாதகிரி மாவட்ட முதன்மை செயல் அதிகாரியாக கிரமா பவார், தொழில்துறை செயலாளராக ஷாம்லா இக்பால், உணவு வழங்கல் துறை ஆணையரா கனகவள்ளி, கர்நாடக பட்டு வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக வி.வி.ஜோத்சய், கர்நாடக மின்வாரிய கழக நிர்வாக இயக்குனராக பாவரயானி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையராக தயான்ந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் சுற்றுலா தறை கூடுதல் நிர்வாக இயக்குனராக ஜெகதீஷ், மாற்றுத்திறனாளி நலவாரிய அதிகாரியாக லதாகுமாரி, கோலார் கலெக்டராக வெங்கட்ராஜா, கிராமப்புற மேம்பாட்டு துறை ஆணையராக ஷில்னக், கர்நாடக ஆட்சி நிர்வாக பணி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியக நளினி அதூல், பஞ்சாயத்து ராஜ் துறை ஆணையராக ஷில்பா ஷர்மா, கர்நாடக சிறுபான்மையினர் ஊக்கத்தொகை கமிட்டி நிர்வாக இயக்குனராக என்.எம்.நாகராஜ், கலால்துறை கூடுதல் ஆணையராக ஷேக் தன்வீர், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக லிங்கமூர்த்தி, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (ரேரா) செயலாளராக இப்ராகிம் மைகூர், வடகிழக்கு கர்நாடக போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக பட்டீல் புபனேஸ் தேவிதார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்