எடியூரப்பாவிடம் இருந்து சித்தராமையா பணம் பெற்றார்- குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க எடியூரப்பாவிடம் இருந்து சித்தராமையா பணம் பெற்றதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2022-01-26 15:59 GMT
பெங்களூரு,

சட்டசபை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க எடியூரப்பாவிடம் இருந்து சித்தராமையா பணம் பெற்றதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில்  நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது ஒரு முறை 8 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிக்க சித்தராமையா எடியூரப்பாவிடம் இருந்து பணம் பெற்றார். அந்த பணத்தை கொண்டு வந்து கொடுத்தது யார் என்று நான் கேட்டேன். அந்த கேள்விக்கு சித்தராமையா பதில் அளிக்கவில்லை.

சித்தராமையா ஆட்சியில் இருந்தபோது, அர்க்காவதி லே-அவுட் அமைத்ததில் பெரிய அளவில் முறைகேடு நடந்தது. தன்னை கண்டால் குமாரசாமிக்கு பயம் என்று சித்தராமையா கூறியுள்ளார். நான் யாரை பார்த்தும் பயப்படுவது இல்லை. மாநில மக்களை பார்த்து மட்டுமே பயப்படுகிறேன். சித்தராமையாவுக்கு எந்த கொள்கையும் இல்லை. ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பது மட்டுமே அவரின் சித்தாந்தம்” என்றார். 

மேலும் செய்திகள்