டெல்லியில் ஆன்லைன் செயலி மூலம் வழிப்பறி, திருட்டுக்கு சில நிமிடங்களில் நடவடிக்கை

வழிப்பற்றி, திருட்டு குறித்து உடனடியாக இணையதளம் மூலமாக E-FIR பிரிவில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-27 17:31 GMT
புதுடெல்லி,

வழிப்பறி, திருட்டு வழக்குகள் குறித்த புகார்களை இணையதளம் வாயிலாக பதிவு செய்யும் முறையை டெல்லி காவல்துறை தொடங்கியுள்ளது. இதற்காக E-FIR என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் எந்த பகுதியில் திருட்டு நடந்தாலோ அல்லது வழிப்பறி செய்யப்பட்டாலோ உடனடியாக இணையதளம் மூலமாக E-FIR செயலியில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறு புகார் அளிக்கப்படும் சில நிமிடங்களில், காவல்நிலைய இணையதள பிரிவு மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உடனடியாக வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையின் நகல், புகார் அளித்தவரின் மின்னஞ்சல் ஆகியவை குறிப்பிட்ட பகுதிகளின் காவல் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்