இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட இன்று சற்று குறைவு

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 15.88 சதவிகிதமாக உள்ளது.

Update: 2022-01-28 03:35 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் லட்சங்களில் பதிவாகி வருகிறது. கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக பதிவாகி வந்த நிலையில், இன்று தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று சரிந்துள்ளது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:   கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 209- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 627- பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 3 லட்சத்து 47 ஆயிரத்து 443- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 21 லட்சத்து 05 ஆயிரத்து 611- ஆக உயர்ந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 15.88 சதவிகிதமாக உள்ளது. 

மேலும் செய்திகள்