பிரதமர் மோடி பற்றிய புத்தகம் இன்று வெளியீடு

கொரோனாவுக்கு எதிராக பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் போர் பற்றிய புத்தகம் இன்று வெளியிடப்பட உள்ளது.

Update: 2022-02-17 23:42 GMT


புதுடெல்லி,


கொரோனாவுக்கு எதிரான போரில் 2 ஆண்டுகளாக மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.  இந்த நிலையில், கொரோனாவுக்கு எதிராக, பிரதமர் மோடி தலைமையிலான இந்தியாவின் போர் பற்றிய புத்தகம் இன்று வெளியிடப்பட உள்ளது.

அந்த புத்தகத்திற்கு எ நேசன் டு புரொடெக்ட் (ஒரு தேசத்தின் பாதுகாப்பு) என்று பெயரிடப்பட்டு உள்ளது.  பிரியம் காந்தி மோடியின் 3வது புத்தகம் இதுவாகும்.

இந்த புத்தகத்திற்கு தலைப்பு தேர்வு செய்தது பற்றி பிரியம் கூறும்போது, பல்வேறு பிரிவுகளிலும் இருந்து ஊக்கமிழக்க செய்யும் வகையிலான விமர்சனங்கள் உள்பட பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டபோதும், உங்களுடைய மனநிலை எப்படி குலையாமல் இருந்தது? என பிரதமரிடம் கேட்டேன்.  உங்களை ஊக்கப்படுத்தியது எது? என்றும் அவரிடம் கேட்டேன்.

அதற்கு பிரதமர் மோடி அளித்த விளக்கத்தில், நிலைமையை உற்று கவனிக்கும்போது, பொது முடக்கத்திற்கான என்னுடைய அழைப்புக்கு மக்கள் செவிசாய்த்ததுடன், வீட்டிலேயே அவர்கள் இருந்தனர்.

அதனால், மக்களிடமிருந்தே இந்த தாக்கம் எனக்கு வந்தது என கூறினார்.  ஆகையால், ஒரு தேசமே பாதுகாப்பில் ஈடுபட்டது.  அதனாலேயே இந்த புத்தகத்தின் தலைப்பை அதிலிருந்து எடுத்தேன் என அவர் கூறியுள்ளார்.

இந்த புத்தகம் இன்று மதியம் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவால் வெளியிடப்பட உள்ளது.  இதில், சுகாதார அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் செய்திகள்