கொரோனா பாதிப்பு உயர்வு; கடுமையாக கண்காணிக்க 5 மாநிலங்களுக்கு அரசு உத்தரவு

டெல்லி, கேரளா உள்பட 5 மாநிலங்களில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடுமையாக கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-04-08 17:04 GMT



புதுடெல்லி, 



இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது.  எனினும், டெல்லி, அரியானா, கேரளா, மராட்டியம் மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

இதனை தொடர்ந்து, மத்திய அரசு இந்த 5 மாநிலங்களும் கடுமையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது.

மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் எழுதிய அந்த கடிதத்தில், தொற்று பரவலை தொடர்ந்து கண்காணிக்கும்படியும், கொரோனா பாதிப்புகளை திறமையாக கையாள வேண்டிய தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கொரோனா பரிசோதனை, கண்காணித்தல் ஆகியவை தொடர்ந்து முக்கியத்துவம் தரப்பட வேண்டிய விசயங்கள் என்றும், தொற்று, அதன் பரவல் மற்றும் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை கண்டறிதலும் மிக அவசியம் என்று தெரிவித்து உள்ளது.



மேலும் செய்திகள்