பஞ்சாபில் முகக்கவசம் அணிவது கட்டாயம்: மாநில அரசு உத்தரவு

பஞ்சாப் மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-04-21 07:27 GMT
கோப்புப்படம்
அமிர்தசரஸ்,

நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தியது. குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பல மாநிலங்கள் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இதனால், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா மாநில அரசுகள் மீண்டும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.

அந்த வகையில், டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களை தொடர்ந்து பஞ்சாபிலும் கொரோனா பரவல் அதிகரித்து கானப்படுவதை கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநில அரசு, பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்