சி.யூ.இ.டி. தேர்வை 22 மத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுப்பு - யூ.ஜி.சி தகவல்

சி.யூ.இ.டி. தேர்வை 22 மத்திய பல்கலைக்கழகங்கள் ஏற்க மறுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

Update: 2022-05-27 23:13 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. உள்ளிட்ட முதுகலை படிப்புகளில் சேர்வதற்கான சி.யூ.இ.டி.(CUET) எனப்படும் மத்திய பல்கலைகழகங்களுக்கான பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்தது.

அதன்படி இந்தியாவில் உள்ள 54 மத்திய பல்கலைக்கழகங்களில் டெல்லி ஜே.என்.யூ., புதுச்சேரி பல்கலைக்கழகம், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 32 மத்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே சி.யூ.இ.டி. தேர்வின்படி மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன.

ஆனால் 22 மத்திய பல்கலைக்கழகங்கள், வரும் கல்வியாண்டில் சி.யூ.இ.டி. தேர்வை ஏற்க மறுத்துள்ளதாக பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்