மரம் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்த விழுந்து 3 பேர் பலி, ஒருவர் காயம்

உத்தரப்பிரதேசத்தில் மரம் வெட்ட சென்ற போது, மரத்தின் மீது உயர் அழுத்த மின்கம்பி அறுந்த விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.;

Update:2022-09-11 05:08 IST

சஹாரன்பூர்,

உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹாரன்பூரில் நேற்று மரம் வெட்ட சென்ற போது, மரம் மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.

இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் சூரஜ் ராய் கூறும்போது, ராம்பூர் மணிஹரன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மட்னுகி கிராமத்தில் உள்ள ஒரு நபரின் பண்ணைக்கு மரம் வெட்டுவதற்காக அந்த நபர்கள் சென்றனர். அப்போது மரம் மீது உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் சதாம் (32), நௌஷாத் (30) மற்றும் அஜய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் காயமடைந்த ஆரிப் என்பவர் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்