உலகக் கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

உலகக் கோப்பை கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-13 03:29 GMT

பனாஜி,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. கடந்த புதன்கிழமை டெல்லியில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கர்நாடகாவைச் சேர்ந்த 3 பேரை கோவா போலீசார் கைது செய்தனர். பனாஜியின் புறநகரில் உள்ள போர்வோரிம் பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் இவர்கள் பதுங்கி இருந்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்