அயோத்தி ராமர் கோவிலில் நடிகர் அமிதாப் பச்சன் 2-வது முறை வழிபாடு
கடந்த மாதம் நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழாவில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார்.;
Image Courtesy : ANI
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா கடந்த ஜனவரி 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் இந்தி திரையுலகின் மூத்த நடிகர் அமிதாப் பச்சனும் இந்த விழாவில் கலந்து கொண்டு ராமரை தரிசனம் செய்தார். தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் அமிதாப் பச்சன், 2-வது முறையாக அயோத்தி கோவிலுக்கு வருகை தந்து ராமரை தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். அவரது வருகையையொட்டி கோவில் வளாகத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.