அகமதாபாத் மாநகராட்சி மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட முடிவு

அகமதாபாத் மாநகராட்சி மருத்துவக் கல்லூரிக்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-09-15 21:53 IST

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி, பா.ஜனதாவின் நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. மாநகராட்சியின் மருத்துவ கல்வி அறக்கட்டளை (மெட்) சார்பில் ஆமதாபாத் மணி நகரில் ஒரு மருத்துவ கல்லூரி நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், 'ஏ.எம்.சி. மெட் மருத்துவ கல்லூரி' என்று அழைக்கப்படும் அந்த கல்லூரிக்கு 'நரேந்திர மோடி மருத்துவ கல்லூரி' என்று பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆமதாபாத் மாநகராட்சி நிலைக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ கல்லூரி, பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது கட்டப்பட்டதாக ஆமதாபாத் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ஹிடேஷ் பரோட் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்