அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் - தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு

சிசிஐ ரூ.200 கோடி அபராதம் விதித்த உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர்.

Update: 2022-06-13 09:40 GMT

Image Courtesy : AFP 

புதுடெல்லி,

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் விதித்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி "ப்யூச்சர்" குழும நிறுவனத்தில் முதலீடு செய்ததாக அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் சில்லரை விற்பனையில் நுழையும் வகையில் ப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்போது அமேசான் நிறுவனம் சில தகவல்களை மறைத்து, இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு மற்றும் அந்நிய செலாவணி சட்டங்களை மீறியதாக கடந்த ஆண்டு ஃப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனம் சிசிஐயிடம் புகாா் அளித்தது.

ப்யூச்சா் கூப்பன்ஸ் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் நோக்கத்தை மட்டுப்படுத்த வேண்டுமென்றே செயல்பட்டுள்ளதன் மூலம், சில விதிமுறைகளை அமேசான் நிறுவனம் மீறியுள்ளதால் அந்த நிறுவனம் ரூ.202 கோடி அபராதம் செலுத்த கடந்த டிசம்பர் மாதம் சிசிஐ உத்தரவிட்டது.

இதன் மேல்முறையீடு வழக்கு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் எம். வேணுகோபால் மற்றும் அசோக் குமார் மிஸ்ரா அடங்கிய அமர்வு இன்று தீர்பளித்தது. அதில் சிசிஐ ரூ.200 கோடி அபராதம் விதித்த உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர். இந்த தொகையை அமேசான் நிறுவனம் 45 நாட்களுக்குள் செலுத்தவும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்