கர்நாடகாவில் மதிய உணவு திட்ட ஊழியர்கள் வளையல் அணியக்கூடாதா? சித்தராமையா விளக்கம்

மதிய உணவு திட்ட பெண் ஊழியர்கள் பணியின்போது, வளையல் அணியக்கூடாது என்று கர்நாடக அரசு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

Update: 2023-07-17 03:30 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது, மதிய உணவு திட்ட பெண் ஊழியர்கள் பணியின்போது, வளையல் அணியக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு இணையவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து கருத்து வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு ஆதரவும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து முதல்-மந்திரி சித்தராமையா இதற்கு விளக்கம அளித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக அரசு மதிய உணவு திட்ட ஊழியர்கள் வளையல் அணியக்கூடாது என்று கூறி உத்தரவிட்டுள்ளதாக கூறி சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இது ஒரு பொய்யான தகவல். உண்மையில் மத்திய அரசு, போஷன் திட்டத்தின் கீழ் ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதில் மதிய உணவு திட்ட ஊழியர்கள் வளையல் அணிவதை தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்