மாநில சட்டசபையில் மலிவான வார்த்தைகளை நிதிஷ்குமார் பயன்படுத்தி உள்ளார் - நிர்மலா சீதாராமன்

சட்டசபையில் இப்படி பேசுவது வெட்கக்கேடானது.

Update: 2023-11-09 23:00 GMT

போபால்,

படித்த பெண்களையும், மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதையும் தொடர்புபடுத்தி, பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், அம்மாநில சட்டசபையில் பேசினார். அதற்கு அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்நிலையில், மத்தியபிரதேச தலைநகர் போபாலுக்கு நேற்று வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் இதுபற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

ஒரு மாநில முதல்-மந்திரியாக உள்ள மூத்த அரசியல்வாதி, மாநில சட்டசபையில் மலிவான வார்த்தைகளை பயன்படுத்தி பெண்களின் கல்வி, ஆரோக்கியம் குறித்து பேசி உள்ளார். சட்டசபையில் இப்படி பேசுவது வெட்கக்கேடானது. இது, 'இந்தியா' கூட்டணியின் மனப்பான்மையை காட்டுகிறது. பெண்களை ஓட்டு வங்கியாக மட்டுமே அவர்கள் பார்க்கிறார்கள். காங்கிரசின் முதல் குடும்பத்தை சேர்ந்த யாரும் அக்கருத்தை கண்டிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்