பீகாரில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் 6,146 டெங்கு வழக்குகள் பதிவு

பீகாரில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் 6,146 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன.

Update: 2023-10-01 12:28 GMT

பாட்னா,

பீகாரில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் 6,146 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த ஆண்டில் இதுவரை மொத்தமாக 6,421 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் 6,146 வழக்குகள் செப்டம்பரில் மட்டும் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரை (1,896 வழக்குகள்) விட இது மூன்று மடங்கு அதிகமாகும்.

பீகாரில் நேற்று முன்தினம் 416 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக பாட்னாவில் 177 பேர், முங்கரில் 33 பேர், சரணில் 28 பேர், பாகல்பூரில் 27 பேர், பெகுசராயில் 17 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொற்று நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் படி, பீகாரில் இந்த ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி வரை டெங்குவால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 295 பேர் டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்