சண்டிகார் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் - பகவந்த் மான்

சண்டிகார் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும் என்று பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.;

Update:2022-08-20 20:48 IST

சண்டிகார்,

சண்டிகாரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் சூட்டப்படும் என்று பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் கூறியுள்ளார். இரு மாநில அரசுகளுக்கு இடையே இன்று நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு இதனை பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அரியானா மாநில துணை முதல் மந்திரி துஷ்யந்த் சவுதாலா கலந்து கொண்டார்.

சண்டிகார் விமான நிலையத்திற்கு பகத் சிங்கின் பெயரை சூட்டுவதற்கு பரிந்துரைக்கப்படுவது இது முதல் முறையல்ல. முன்னதாக, 2016 ஆம் ஆண்டு, அரியானா சட்டமன்றம் சண்டிகார் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயரை சூட்ட ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் அரசு ஏற்கெனவே, சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் நினைவு தினமான மார்ச் 23 அன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் முதல் மந்திரி பகவந்த் மானின் உத்தரவுக்குப் பிறகு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் பகத்சிங் மற்றும் அம்பேத்கர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்