சார்மடி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ

மூடிகெேர அருகே சார்மடி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 20 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசமாகி உள்ளது.

Update: 2023-03-07 18:45 GMT

சிக்கமகளூரு:

மூடிகெேர அருகே சார்மடி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 20 ஏக்கரில் மரம், செடி-கொடிகள் எரிந்து நாசமாகி உள்ளது.

சார்மடி மலைப்பகுதியில் காட்டுத்தீ

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெேர தாலுகாவில் சார்மடி மலைப்பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் சிக்கமகளூரு-மங்களூருவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சார்மடி மலைப்பகுதியில் ஆலேக்கான் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகே திடீெரன்று காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த தீ, காய்ந்திருந்த புற்கள் மூலம் மரம், செடி-கொடிகளுக்கு பரவி மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள், உடனடியாக வனத்துறையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

20 ஏக்கரில்...

இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு படையினர் இணைந்து காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் அதற்குள் 20 ஏக்கரில் மரங்கள், செடி-கொடிகள் எரிந்து நாசமாகின.

தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றவர்கள் அங்கு தீவைத்திருக்கலாம் என்று வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் பனகல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கர்நாடகத்தில் கோடைகாலம் தொடங்கி விட்டதால் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. சிக்கமகளூரு மாவட்டத்தில் காட்டுத்தீ ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் வனத்துறையினர் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்