ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு

ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-26 14:51 GMT

புதுடெல்லி,

இந்திய ராணுவ தளபதியாக பதவி வகித்து வருபவர் மனோஜ் பாண்டே. இவர், 2022 ஏப்ரல் 20-ம் தேதி இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வருகிற 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில், ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் (ஜூன் 31-ம் தேதி) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக கடந்த 1975 ஆம் ஆண்டு அப்போதைய ராணுவ தளபதி ஜி.ஜி.பீவூருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளித்து இந்திரா காந்தி அரசு உத்தரவிட்டது. அதன்பின்னர் தற்போது மனோஜ் பாண்டே பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மனோஜ் பாண்டேவுக்குப் பின்னர் ராணுவத் தளபதியாகும் வாய்ப்புள்ள இரண்டு மூத்த ராணுவ அதிகாரிகளும் ஜூன் மாதம் பணி ஓய்வு வயதை எட்டும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்