முனிசாமி எம்.பி.க்கு காங்கிரஸ் கண்டனம்

அரசு நிகழ்ச்சியில் தரக்குறைவாக நடந்து கொண்ட பா.ஜனதாவைச் சேர்ந்த முனிசாமி எம்.பி.க்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-06 18:45 GMT

கோலார் தங்வயல்

அரசு நிகழ்ச்சியில் தரக்குறைவாக நடந்து கொண்ட பா.ஜனதாவைச் சேர்ந்த முனிசாமி எம்.பி.க்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கோலாரில் நேற்று காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் லட்சுமி நாராயணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோலாரில் கடந்த மாதம்(செப்டம்பர்) 25-ந் தேதி ஜனதா தரிசன தொடக்க நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாவட்ட பொறுப்பு மந்திரி, மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்டோர் அங்கு இருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் பா.ஜனதாவைச் சேர்ந்த முனிசாமி எம்.பி. அதிரடியாக அனுமதி இன்றி உள்ளே நுழைந்து தரக்குறைவாக பேசினார். இது கண்டிக்கத்தக்கது. அவரது நடவடிக்கை மற்றவர்களை முகம் சுழிக்க வைத்தது. இந்த விவகாரத்தில் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இது அரசின் கடமை ஆகும். அங்கு பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து மந்திரியின் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் முனிசாமி எம்.பி. அங்கிருந்து வெளியேற்றினர். இதில் எந்த தவறும் இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் மக்கள் பிரதிநிதிகள் இதுபோல் நடந்து கொள்ளாமல் கண்ணியமாக நடப்பது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்