குடிப்பழக்க நிவாரணியை தவறுதலாக சாப்பிட்ட சிறுவன் சாவு

கலபுரகி அருகே குடிப்பழக்க நிவாரணியை தவறுதலாக சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.;

Update:2022-05-31 02:54 IST

கலபுரகி:

கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா வாடி டவுனை சேர்ந்தவன் விஷ்ணு ஜாதவ் (வயது 8). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த விஷ்ணுவின் தந்தை அதில் இருந்து விடுபட மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி வந்தார். இந்த நிலையில் அந்த மருந்தை மிளகாய் பஜ்ஜியில் விஷ்ணுவின் தந்தை தடவி வைத்து இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் குடிப்பழக்க நிவாரணி மருந்து தடவி இருந்த மிளகாய் பஜ்ஜியை, விஷ்ணு சாப்பிட்டதாக தெரிகிறது.

இதனால் அவனுக்கு வாந்தி, மயக்கம் உண்டானது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் விஷ்ணுவை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் விஷ்ணு இறந்து விட்டான். இந்த சம்பவம் குறித்து வாடி போலீசார் நடத்திய விசாரணையில் மருந்து தடவிய பஜ்ஜியை தவறுதலாக சாப்பிட்டதால் விஷ்ணு இறந்தது தெரியவந்து உள்ளது. சம்பவம் குறித்து வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்