டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: பி.ஆர்.எஸ். தலைவர் கவிதா கோர்ட்டில் ஆஜர்

கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Update: 2024-03-26 08:02 GMT

Image Courtesy : PTI

புதுடெல்லி,

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த முறைகேட்டில் தொடர்புடையதாக தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 15-ந்தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா அனுமதி வழங்கியிருந்தார். இதன்படி கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அமலாக்கத்துறை காவல் இன்றோடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கவிதாவை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர்.

கோர்ட்டில் ஆஜராவதற்கு முன்பு கவிதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "இது ஒரு சட்டவிரோதமான வழக்கு. இதனை நாங்கள் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்