நாடாளுமன்ற 6-வது கட்ட தேர்தல்: வாக்களித்த அரசியல் தலைவர்கள்

நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Update: 2024-05-25 08:20 GMT

புதுடெல்லி,

நாடு முழுவதும் நாடாளுமன்ற 6-வது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேசம், அரியானா, பீகார், டெல்லி, மேற்குவங்காளம், ஒடிசா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் தொகுதியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான், உத்தரபிரதேசம் சுல்தான்பூர் தொகுதியில் போட்டியிடும் மேனகா காந்தி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்தநாக்-ரஜோரி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி, அரியானா மாநிலம் கர்னால் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார், குருசேத்ரா தொகுதியில் போட்டியிடும் பிரபல தொழில் அதிபர் நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களம் கண்டுள்ளனர்.


 



வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில், அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். ஜனாதிபதி திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியின் மகள் மிராயா மற்றும் மகன் ரைஹான் ராஜீவ் வத்ரா, கிரிக்கெட் வீரரும் அரசியல்வாதியுமான கவுதம் காம்பீர், டெல்லி பாஜக தலைவர் பன்சூரி ஸ்வராஜ், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் எனப் பலரும் வாக்களித்தனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன் வந்து வாக்களித்தனர். பின்னர் பேட்டியளித்த கெஜ்ரிவால், "மக்கள் பெருமளவில் வாக்களிக்க வருகின்றனர். அவர்கள் சர்வாதிகாரம், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராக வாக்களிக்க வருகின்றனர்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்