கர்நாடகாவில் வேட்பு மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது மோசடி வழக்குப்பதிவு

தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-04-27 10:04 GMT

பெங்களூரு ,

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. 24-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த தேர்தலில் காந்திநகர் தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளரான குமார் என்பவர், போலி ஆவணங்கள் அளித்து வேட்புமனு தாக்கல் செய்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பு புகார் அளித்தது.

இந்த புகாரை அடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல் அளித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. சட்ட விரோதமாக அதிமுக பெயரை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தியதாக, தேர்தல் ஆணையத்தில் ஈபிஎஸ் தரப்பு அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்