தெலுங்கானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

தெலுங்கானாவில் உள்ள விஷ்ணுபுரம் ரெயில் நிலையம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

Update: 2024-05-26 12:22 GMT

கோப்புப்படம்

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டூர் நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரெயில், இன்று தெலுங்கானாவில் உள்ள விஷ்ணுபுரம் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.

இதில் சுமார் 6 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்