கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு மனு
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் தேவையின்றி தலையிடுவதாக ரிட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.;
கோப்புப் படம் (ஏஎன்ஐ)
புதுடெல்லி,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் தேவையின்றி ஆளுநர் தலையிடுவதாக கூறி ரிட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக கவர்னருக்கு எதிராக ஏற்கனவே ஒரு மனுவை தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்துள்ள நிலையில், தற்போது சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை கவர்னர் செய்வதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளது.