ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி

Update: 2024-01-21 18:41 GMT
Live Updates - Page 2
2024-01-22 07:31 GMT

அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. பால ராமர் பிரதிஷ்டையை தொடர்ந்து பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

2024-01-22 07:28 GMT

அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலை மலர்கள், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரதிஷ்டைக்குப் பின்னர் பிரதமர் மோடி, பால ராமர் சிலைக்கு முதல் தீபாரதனை காட்டி வழிபாடு நடத்தினார்.

2024-01-22 07:26 GMT

அயோத்தி ராமர் கோவிலில் பால ராமர் சிலை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ராமர் சிலை திறப்பை தொடர்ந்து பிரதமர் மோடி பூஜைகள் செய்தார். ராம பஜனை பாடல்கள் அப்போது பாடப்பட்டன.

2024-01-22 07:23 GMT

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் பிரதமர் மோடி, உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல், உ.பி. முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் சிறப்பு பூஜை நடத்தினர். முன்னதாக பால ராமர் சிலைக்கு சக்தியூட்டும் பூஜை நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

2024-01-22 07:21 GMT

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதலில் பூஜை செய்தார். அவரைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பூஜைகளை செய்தனர். பாலராமர் கண்களில் கட்டப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பிறகு அகற்றப்பட்டது. ராமர் சிலையை பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

2024-01-22 07:00 GMT

சிலை நிறுவுதல் தொடர்பான சடங்குகளை செய்து வருகிறார் பிரதமர் மோடி. ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால்தாஸ் உள்ளிட்டோர் பூஜையில் பங்கேற்றுள்ளனர்.

2024-01-22 06:50 GMT

ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது

ராமர் கோவில் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பிராண பிரதிஷ்டை விழா தொடங்கியது. அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். பெரிய தட்டில் பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்களுடன் வந்த பிரதமர் மோடி பூஜையில் அமர்ந்தார். 

2024-01-22 06:29 GMT

அயோத்தி ராமர் கோவிலை சென்றடைந்தார் பிரதமர் மோடி. அயோத்தியை சென்றடைந்த மோடியின் ஹெலிகாப்டர் மீது பூ மழை தூவி உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. முன்னதாக அயோத்தி விமான நிலையத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் மோடியை வரவேற்றனர்.

2024-01-22 06:14 GMT

அயோத்தி ராமர் கோவில் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் முதல்-மந்திரி உமாபாரதி அயோத்தி ராமர் கோவிலுக்கு வருகை தந்தார். உமாபாரதியை சாத்வி ரிதம்பரா ஆரத்தழுவி அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

2024-01-22 05:50 GMT

தேவரும் முனிவர் தாமும் திசைதொறும் மலர்கள் சிந்த ஓவல் இல் மாரி ஏய்ப்ப, எங்கணும் உதிர்ந்து வீங்கிக் கேவல மலராய், வேறு ஓர் இடம் இன்றிக் கிடந்த ஆற்றால், பூ எனும் நாமம், இன்று இவ் உலகிற்குப் பொருந்திற்று அன்றே என்ற கம்பரின் வரிகளைப் போல அயோத்தி மாநகரம் இன்று மகிழ்ச்சியில் திளைக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்