'நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்; எனது உடல்நலம் குறித்து பா.ஜ.க. பொய் சொல்கிறது' - நவீன் பட்நாயக்

தனது உடல்நலம் குறித்து பா.ஜ.க. பொய் சொல்கிறது என ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் விமர்சித்துள்ளார்.

Update: 2024-05-24 12:19 GMT

புவனேஸ்வர்,

ஒடிசாவின் முதல்-மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்(வயது 77), தனது வயது மற்றும் உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஓய்வு எடுக்க வேண்டும் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார். மேலும் நவீன் பட்நாயக் காணொலி வாயிலாக பேசும்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார் எனவும் பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், தனது உடல்நலம் குறித்து பா.ஜ.க. பொய் சொல்கிறது என நவீன் பட்நாயக் விமர்சித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பா.ஜ.க. மக்களிடம் சொல்லும் பொய்களுக்கு ஒரு எல்லை இருக்கிறது. நீங்கள் இப்போது பார்க்கிறபடி, நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன். பல மாதங்களாக மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். பா.ஜ.க.வினர் தங்கள் சொந்த நுண்ணறிவை முதலில் பயன்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்