ஒசநகர் அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை

ஒசநகர் அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2022-06-26 20:49 IST

சிவமொக்கா;

குடும்பத்தகராறு

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா ரிப்பன்பேட்டை பகுதியில் விசித்து வருபவர் ரபீக். தனியார் பஸ் உரிமையாளர். இவரது மனைவி புஷீரா(வயது 34).

இந்த நிலையில் ரபீக்குக்கும், அவரது மனைவி புஷீராவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்றுமுன்தினமும் கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 2 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ரபீக் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார்.

பெண் தற்கொலை

இதற்கிடையே மனமுடைந்து காணப்பட்ட புஷீரா வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் சிறிதுநேரத்தில் புஷீரா மயங்கி கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.

இதையறிந்த அக்கம்பக்கத்தினர் வந்து புஷீராவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி புஷீரா பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த ரிப்பன்பேட்டை போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் புஷீராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரிப்பன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்